கல்விச் சுற்றுலா - தரம் 7
தரம் 7 மாணவர்களும் ஆசிரியர்களும் தமது வருடாந்த கல்விச் சுற்றுலா செல்லும் முகமாக 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் பாடசாலையிலிருந்து புறப்பட்டு கண்டி நோக்கிப் பயணித்தனர். முதலில் பின்னவல யானைகள் சரணாலயத்தைப் பார்வையிட்டு பின் பேராதெனிய தாவரவியல் பூங்கா, தலதாமாளிகை, மற்றும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் போன்ற இடங்களைப் பார்வையிட்டு இரவு 10.30 மணியளவில் பாடசாலையை வந்தடைந்தனர்.