V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு - 2018

எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு நேற்றைய தினம் அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி திரு.ர.பிரசன்னா (பிரதம வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை - பாவற்குளம்) அவர்கள் பாரியார் திருமதி.அ.பிரசன்னா அவர்கள் சகிதம் கலந்து கொண்டார்.

மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு.முத்து இராதா கிருஷ்ணன் (வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு) திரு.கெ.முகுந்தன் (உதவி பிரதேச செயலாளர், வெண்கலச் செட்டிகுளம்) மற்றும் திருமதி. ஜீவமலர் கணேசலிங்கம் (ஒய்வு நிலை பிரதி அதிபர், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக செல்வன்.க.ஹரிகரன் (தேசிய மட்ட வெற்றியாளர்) செல்வன் கே.மிது (தேசிய மட்ட வெற்றியாளர்) மற்றும் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

புள்ளிகளின் அடிப்படையில் இல்லங்கள் பெற்ற நிலைகள் வருமாறு;
கம்பன் இல்லம் - முதலாம் இடம்
பாரதி இல்லம் - இரண்டாம் இடம்
வள்ளுவர் இல்லம் - இரண்டாம் இடம்
இளங்கோ இல்லம் - நான்காம் இடம்
புகழேந்தி இல்லம் - ஐந்தாம் இடம்

You are here: