V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

 விஞ்ஞான தினம் - 2017

நேற்றைய தினம் 31.10.2017 அன்று எமது பாடசாலையில் காலை 11 மணியளவில் ஐயாத்துரை அரங்கில் விஞ்ஞான மன்ற தலைவர் செல்வன்.அ.உதிஷ்ரன் தலைமையில் விஞ்ஞான தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக Dr.பாமினி நரேந்திரன் (கொழும்பு தெற்கு, போதனா வைத்தியசாலை கலுபோவெல) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.முத்துக்குமார் இராதாகிருஸ்ணன்(வலயக் கல்விப் பணிப்பாளர் - வவுனியா தெற்கு) அவர்களும் எமது பாடசாலை அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களும் Dr.செல்வராஜா மதுரகன்(ஓமந்தை வைத்தியசாலை) அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு விஞ்ஞான மன்றத்தினரால் விஞ்ஞான தீபம் நூலும் வெளியிடப்பட்டது சிறப்பிற்குரிய அம்சமாகும்

E-mail Print

 புல் வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு

இன்று எமது பாடசாலையில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் அரசநிதி ரூபா இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம்  பெறுமதியான புல் வெட்டும் இயந்திரம் வைபவ ரீதியாக பாடசாலை அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி அன்பளிப்பிற்காக பாடசாலைச் சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

E-mail Print

 வெற்றிச் செய்தி

2017.10.24 ஆம் திகதி அன்று நடைபெற்ற மாகாண பட இரண்டாம் மொழி சிங்கள தினப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றியீட்டி உள்ளனர். விபரம் வருமாறு;
செல்வி.T.தட்ஸாயினி(தரம் 6)             -பேச்சுப் போட்டி  -2 ஆம் இடம்
செல்வன் K.டினோசிகன்(தரம் 7)       -பேச்சுப் போட்டி  -2 ஆம் இடம்
செல்வன் S.ஆரணன்(தரம் 8)              -பேச்சுப் போட்டி  -1 ஆம் இடம்
செல்வன் A.கார்த்திகேயன்(தரம் 9)  -பேச்சுப் போட்டி  -2 ஆம் இடம்

இம் மாணவர்களிற்கு பாடசாலைச் சமூகம் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

E-mail Print

 சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2017

சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்க் குழுவினரால் இன்று எமது பாடசாலை மாணவர்களிற்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் விசேட சிறுநீரக நிபுணர் டாக்டர் V.பவந்தன் கலந்துகொண்டு சிறுநீரக பிரச்சினைகள் ஏற்ப்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கினார். இக்குழுவினரிற்கு எமது பாடசாலை சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

E-mail Print

 வெற்றிச் செய்தி 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் எமது பாடசாலை மாணவன் செல்வன் S.கிந்துசன் 10000m தூரத்தை 35 நிமிடம் 65 மில்லி செக்கன் நேரத்தில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பொருமை சேர்த்துள்ளார். இம் மாணவனிற்கு பாடசாலை சமூகம் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Page 9 of 17

You are here: