V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images

V/Vavuniya Tamil Madhya M.V (National School)

E-mail Print

கெளரவிப்பு  விழா

எமது பாடசாலையின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியலாளருமான  திரு.கனகேஸ்வரன் கனேஸ்வரன் என்ற இளைஞனின் உலக சாதனையைப் பாராட்டியும் உயர்தரப் பிரிவு மாணவன் செல்வன் சிவநாதன் கிந்துசன் இன் விளையாட்டுத்துறை சார்பான சாதனையைப் பாராட்டியும்  மற்றும் மாணவன் கிந்துசனை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் திரு.S.நவநீதன் அவர்களை பாராட்டியும் இன்றைய தினம் காலைப் பிராத்தனையின் போது அவர்களிற்கான கெளரவிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. 

திரு.கனகேஸ்வரன் கனேஸ்வரன் என்ற இளைஞனினால்  உலகில் அதிக நீளமான "நீள் மின்  இணைப்புப் பொருத்தி" தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனையாக பதிவிடப்பட்டுள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனையானது இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியான முதலாவது சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு துறையில் பல நெடுந்தூர ஓட்ட நிகழ்ச்சிகளில் தேசிய   சாதனைகளை நிலைநாட்டிய வரிசையில் எமது மாணவன் செல்வன் சிவநாதன் கிந்துசன் இந்த வருடம் இடம்பெற்ற மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் மேற்படி தூரத்தை 16 நிமிடங்கள் 18.43 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை நிலைநாட்டி உள்ளார். 

இம் மாணவர்களின் சாதனைகள் மேலும் மேலும் தொடர பாடசாலைச் சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 உயர்கல்வி தொடர்பான கருத்தரங்கு

NSBM Green University Town இனால் எமது பாடசாலை உயர்தரப் பிரிவு மாணவர்களிற்கு உயர்கல்வி தொடர்பான கருத்தரங்கு இன்று ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

E-mail Print
பெண் சாரணியருக்கான சின்னம் சூட்டல் 
இன்று எமது பாடசாலையில்  பெண் சாரணியருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில்  இடம்பெற்றது.
Read more...
E-mail Print

 எமது மாணவர்களின் சாதனை வரிசையில்....

Yarl IT Hub தனியார் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட Yarl Geek Junior Challenge 2018 இறுதிச் சுற்றில் எமது மாணவர்கள் பு.தனோஜன் மற்றும் ந.மிலக்க்ஷன் ஆகியோர் Smart Alert System for Elephants and Human Conflict இனை வடிவமைத்து வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.

https://www.facebook.com/profile.php?id=100010132874603

E-mail Print
User Rating: / 1
PoorBest 

 மாகோற்சவப் பெருவிழா

எமது பாடசாலையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வித்தியா விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மாகோற்சவப் பெருவிழா 08-06-2018 அன்று கொடியேறி நேற்றைய தினம் இறுதி நாள் சங்காபிஷேகத்ததுடன் இனிதே நிறைவுபெற்றது.

Page 1 of 17

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »
You are here: